தேசம் காக்கும் ராணுவத்தினருக்கு சல்யூட்- காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

தேசம் காக்கும் ராணுவத்தினருக்கு சல்யூட்- காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

திருச்சியில் 'ஜெய் ஹிந்த்,தேசம் காக்கும் ராணுவத்தினருக்கு சல்யூட்' என்ற தலைப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.திருச்சியில் கார்கில் போர் வீரர் மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி முன்பாக தொடங்கிய பேரணி, பெரியார் சிலை வழியாக, காமராஜர் சிலையை கடந்து, திருச்சி திருவள்ளுவர் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில், மேஜர் சரவணன் சதுக்கத்திற்கு, காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தி, தேசபக்தி உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

பின்னர் தொடங்கிய பேரணியில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேற்பார்வையாளர் சூரஜ் ஹெட்டே, பாராளுமன்ற கரூர் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தும் வகையில் இப் பேரணி நடத்தப்பட்டது.'ராணுவத்தினருக்கு சல்யூட்' என்ற தலைப்பில் நடைபெறும் பெதுக்கூட்டத்தில் மேற்கண்ட தலைவர்கள் பேசவுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision