சட்டவிரோதமாக ஆற்று மணலை மாட்டு வண்டிகளில் திருடிய மூன்று பேர்

சட்டவிரோதமாக ஆற்று மணலை மாட்டு வண்டிகளில் திருடிய மூன்று பேர்

திருவெறும்பூர் அருகே சட்டவிரோதமாக ஆற்று மணலை மாட்டு வண்டிகளில் திருடிய மூன்று பேரையும் மணல் கடத்துக்குகளுக்கு பயன்படுத்திய மூன்று மாட்டு வண்டிகளையும் கிராம நிர்வாக அலுவலர் பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி கிராம நிர்வாக அலுவலராக ஜோதிமணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் உத்தரவின் பேடி நேற்று அரசங்குடி விளாங்குளம் சாலை பகுதியில் தனது உதவியாளர் ஆரோக்கியதாஸ் என்பவரோடு அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பொழுது 3 மாட்டு டயர் வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.

அப்படி வந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமணி உதவியாளருடன் நிற்பதை பார்த்து வண்டியை நிறுத்திய மாட்டை அவிழ்த்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.அவர்களை பிடித்து மாட்டு வண்டியவுடன் ஜோதிமணி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

 அதன் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கிளியூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆபிரகாம் (43), கிளியூர் குடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (32 ), கிளியூர் அண்ணா நகரை சேர்ந்த வீராசாமி மகன் மோகன் (28) என்பதும் அவர்களிடமிருந்து 3 மாட்டு வண்டிகள் மற்றும் சுமார் 4 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவர்கள் மூன்று பேரையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision