எகிப்தை தொடர்ந்து துருக்கி வெங்காயமும் திருச்சி வந்தடைந்தது:

எகிப்தை தொடர்ந்து துருக்கி வெங்காயமும் திருச்சி வந்தடைந்தது:

ருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு 60 டன் பெரிய வெங்காயம் கர்நாடகாவிலிருந்தும், 100 டன் சின்ன வெங்காயம் பெரம்பலூரில் இருந்தும் வந்தது.வெங்காய தட்டுப்பாட்டை போக்குவதற்காக எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது துருக்கியிலிருந்து 10 டன் வெங்காயம் பெங்களூர் வழியாக திருச்சி வெங்காய மண்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு வெங்காயம் 700 முதல் 800 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கிறது.ஒரு கிலோ 110 ரூபாய் வரை விற்கப்படும் துருக்கி வெங்காயம் பார்ப்பதற்கு பழுப்பு நிறத்திலான தோளும், உள்ளே மஞ்சள் நிறமாகவும் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குவதில்லை என்றும், ஆனால் இதன் சுவை குறையாமல் இருப்பதால் ஹோட்டல் பயன்பாட்டிற்கு மட்டும் வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 30 டன் வெங்காயத்தில் 5 டன் மட்டுமே மீதம் இருக்கிறது.மகாராஷ்டிரா வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கும் வரை எகிப்து மற்றும் துருக்கி வெங்காயம்,வெங்காய தட்டுப்பாட்டை போக்கவும், விலையை கட்டுக்குள் வைக்கவும் உதவும் என்கின்றனர் வியாபாரிகள்.தற்போது திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.