தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்:

அதிகரிக்கும் ஆன்லைன் மோகம்… அழிவின் விளிம்பில் வியாபாரிகள்..ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வணிகர்கள் சங்கத்தினர், சமூக அமைப்பினர், வியாபாரிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் ஆன்லைன் வர்த்தகத்தில் அன்னிய முதலீடு 100% அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் பொருளாதார சந்தையான இந்தியாவில் 100% அந்நிய முதலீடு என்பது கோடிக்கணக்கான வணிகர்களையும், இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் குடும்பங்களும் பாதிக்கப்படும் எனவும், இந்த ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிக்கும் மத்தியரசை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் அகில இந்திய வணிகர்கள் சங்கம் மாநாட்டில் மிகப்பெரிய போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் மாநிலச் செயலாளர் கோவிந்தராஜுலு தெரிவித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக ஏராளமானோர் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.