நூறு வழக்குகளை கடந்த சட்டவிரோத லாட்டரி விற்பனை மற்றும் மது விற்பனை - தனிப்படை போலீசார் அதிரடி

நூறு வழக்குகளை கடந்த சட்டவிரோத லாட்டரி விற்பனை மற்றும் மது விற்பனை - தனிப்படை போலீசார் அதிரடி

Advertisement

திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் படி தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு சட்டவிரோத லாட்டரி விற்பனை மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து தற்போது 100 வழக்குகளை கடந்து உள்ளனர்.

இந்நிலையில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று லால்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். வின்சன்(70) அருண் சின்னப்பா(29( வேல்முருகன் (20) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து நூத்தி இருவத்தி ஒரு மது பாட்டில்களை பறிமுதல் செய்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மணப்பாறை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த மணப்பாறை பகுதிகளை சேர்ந்த ஜோசப்(45),தோமஸ்(52), குணசேகர்(39), அண்ணாமலை டீ ஸ்டால் லூர்து சாமி(48), டேனியல்(44), சதீஷ்குமார் (33) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் , 6 செல்போன், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 6790 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிரடியாக தனிப்படை போலீசார் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை பிடித்து வருவது பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.