திருச்சியில் கள்ள ஓட்டு - '49 P' சட்டத்தின் மூலம் வாக்கு செலுத்திய இளைஞர்

திருச்சியில் கள்ள ஓட்டு - '49 P'  சட்டத்தின் மூலம் வாக்கு செலுத்திய இளைஞர்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு மணி நிலவரப்படி 41.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் அபுதாபியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார் (34). இவர் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190 வரிசை எண் 990), மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த சென்றார்.

Advertisement

அவரது வாக்கை முன்னதாக யாரோ கள்ள ஓட்டாக செலுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. அவருடைய பெயரை வைத்து வேறு ஆதார் எண்ணை வைத்து ஓட்டு போட்டது தெரியவந்துள்ளது. சர்க்கார் பட பாணியில் நடைபெற்ற இச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் தனது ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr