பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கிரீன் கோ பிளாட்டினம் பசுமைச் சான்று

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கிரீன் கோ பிளாட்டினம் பசுமைச் சான்று

தெற்கு இரயில்வே திருச்சி பொன்மலை பணிமனைக்கு 31.12.2021 அன்று இந்திய தொழில் கூட்டமைப்பின் மதிப்பு மிக்க உலக அளவிலான கிரீன்கோ பிளாட்டினம் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றளிப்பு பெற்ற இரண்டாவது இந்திய ரயில்வே பணிமனையாக பொன்மலை பணிமனை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இதற்கு முன் 2018ம் ஆண்டு பொன்மலை பணிமனைக்கு தேசிய அளவிலான தங்க மதிப்பீடு (Gold Rate) சான்று அளிக்கப்பட்டது. இந்த அரிய வகை சான்றிதழை பெறுவதற்காக தெற்கு இரயில்வே பொது மேலாளர் மற்றும் முதன்மை தலைமை இயந்திர பொறியாளர் ஆகியோரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் 2021 ஜூன் மாதம் முதல் பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆண்டு முழுவதும் மரம் நடுதல் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு ஆற்றல் சேமிப்பு முறைகள் பின்பற்றப்பட்டன. குறிப்பாக அதிகம் மின் சக்கி நுகரும் எந்திரங்களுக்கு பதிலாக மின் சக்தி நுகர்வு குறைந்த இயந்திரங்களை நிறுவுதல், செயல்முறை பயன்பாட்டிற்காக தண்ணீரை சூடாக்குவதற்கு சூரியசக்தி செறிவூட்டிகளை நிறுவுதல், ஜலவாயு போன்ற புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆற்றல் நுகர்வை கண்காணிக்க IoT (Internet of Things) எனப்படும் கண்காணிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் சுத்தீகரிக்கும் இயந்திரம் வெளியிடும் கழிவு நீரை, செயல்முறை பயன்பாடடுக்காக நீர் மறுசுழற்சி செய்து நீர் நுகர்வு கட்டுப்படுத்தப்பட்டது. கிரீன்கோ அமைப்பின் பசுமை விநியோக சங்கிலியை உறுதி செய்வதற்காக நுகர்வோர் அமர்வுகள் நடத்தப்பட்டன. மேற்கண்ட அனைத்து முயற்சிகளும் இரண்டு நிலைகளில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) உதவியில் 
மதிப்பிடப்பட்டன. 17.12.2021 அன்று முன் மமதிப்பீட்டு தணிக்கை (Pretty Assessment)-யும் 28.12 மற்றும் 29.12.2021 ஆகிய இரு நாட்களில் CII குழுவால் இறுதி சான்றிதழ் தணிக்கையும் நடத்தப்பட்டன.

மேலும் பொன்மலை பணிமனையின் முயற்சிகள் பாராட்டப்பட்டன. CII விருது பரிந்துரையின் போது பொன்மலை பணிமனையின் செயல்பாடுகள் மற்ற பணிமனைகளுக்கு ஒரு அளவுகோலாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தது. அனைத்து முயற்சிகளாலும் பொன்மலை பணிமனை 31.12.2021 அன்று உலக அளவிலான மதிப்புக்கூட்டு பிளாட்டினம் சான்று பெறுவதற்கு சாத்தியமானது. தற்போது அளிக்கப்பட்டுள்ள சான்றிதழ் மூன்று ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn