தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி - திருச்சியில் பரபரப்பு!!

தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி - திருச்சியில் பரபரப்பு!!

அரசு வழங்கிய இலவச காலி மனை அடியாட்களை வைத்து மிரட்டி அபகரிக்க முயற்சிக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன். அவரது மனைவி தேன்மொழி (வயது 60) இவர்களுக்கு கடந்த 1996 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரால் இலவச காலி மனை அனுபவப்பட்ட வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜோதி மற்றும் அவரது தம்பிகள் சசிகுமார், அருள் ஆகியோர் காலிமனை புறம்போக்கு என கூறி அவரது சகோதரி ரேவதி பெயரில் போலி பட்டா வாங்குவதற்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி ஜோதிவேல் உள்ளிட்ட எட்டு பேர் கருப்பண்ணன் குடும்பத்தினரை மிரட்டி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் கருப்பண்ணன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாங்கள் கையோடு கொண்டு வந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஆயினும் ஜோதிவேல் சகோதரி ரேவதி இதுகுறித்து கூறுகையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலத்தை நிலத்திற்கு ரூபாய் 15,000 விலை பேசி பணத்தை பெற்றுக்கொண்டு விட்ட நிலையில் தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கருப்பண்ணன் கூறுவதாக தெரிவித்தார்.