முழு ஊரடங்கு எதிரொலி திருச்சியில் காய்கறி சந்தையில் எகிறிய விலையேற்றம்.

முழு ஊரடங்கு எதிரொலி திருச்சியில் காய்கறி சந்தையில் எகிறிய விலையேற்றம்.

பொதுமக்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு முடியும் வரை எந்தவித காய்கறிகளும் கிடைக்காது என்ற பிம்பத்தை உருவாக்கி, வியாபாரிகள் காய்கறிகளின் விலையை செயற்கையாக உயர்த்திவிட்டனர்.

ஒரு கிலோ பீன்ஸ் 150 ரூபாய், முட்டைக்கோஸ் 30 ரூபாய், வெண்டைக்காய் 60 ரூபாய், அவரைக்காய் 100 ரூபாய், கேரட் 50 ரூபாய், சௌசௌ 20 ரூபாய், மாங்காய் 40 ரூபாய், முருங்கைக்காய் 80 ரூபாய், வெங்காயம் 25 ரூபாய், கத்தரிக்காய் 80 ரூபாய், கத்திரிக்காய் 80 ரூபாய், உருளைக்கிழங்கு 30 ரூபாய், தக்காளி 25 ரூபாய், தேங்காய் ஒன்று 25 ரூபாய், பீட்ரூட் 30 ரூபாய், எலுமிச்சம்பழம் ஒன்று 5 ரூபாய் என்ற வகையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று காலை விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலையை காட்டிலும், இன்று மூன்று மடங்கு விலை உயர்வாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு செயற்கை விலை ஏற்றம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காந்தி மார்க்கெட்டை சுற்றிலும் உள்ள காய்கறி கடைகளிலும், திருச்சி மேலப்புலியூர் ரோட்டில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், காய்கறிகளை வாங்க அதிகாலை முதல் குவிய தொடங்கினர்.

இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில்  தனிமனித இடைவெளியை உறுதி செய்வதற்கு, காவல்துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தி வந்தனர். முகக் கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK