திருச்சியில் கவுன்சிலர் கழுத்தை நெறுக்கிய மாடு பிடிப்பவர் - பொதுமக்கள் ஆத்திரம் அடிதடி

திருச்சியில் கவுன்சிலர் கழுத்தை நெறுக்கிய மாடு பிடிப்பவர் - பொதுமக்கள் ஆத்திரம் அடிதடி

திருச்சி மாநகராட்சி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு ஒப்பந்தக்காரர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக திருச்சி மாநகராட்சியில் வேன் போன்ற அமைப்பில் வாகனமும் உள்ளது. இவர் திருச்சி மாநகர பகுதியில் சுற்றித் திரியும் மற்றும் போக்குவரத்து இடையூறாக இருக்கும் கால்நடைகளையும் பிடித்து உறையூர் கோணக்கரை பகுதி உள்ள மாநகராட்சியின் பட்டியில் அடைப்பார்.

மாநகராட்சி சாலையில் சுற்றி திரிய விடும் கால்நடை உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அமராதம் விதிக்கிறது. அதனை அவர் முறையான ரசீது கொடுத்து வசூல் செய்வது பணியாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று திருச்சி பொன்னகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த கால்நடையை அவர் பிடிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அப்பகுதி மக்கள் ஏராளமான ஒன்று கூடி தமிழ்ச்செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தமிழ்ச்செல்வன் இரவு நேரங்களில் கால்நடைகளை பிடித்து விடுவதாகவும், சாலை மற்றும் வீதிகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்தால் அதற்குரிய அபராத தொகை கட்ட சென்றால் அந்த கால்நடைகள் பட்டியில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

ஆனால் தமிழ்ச்செல்வன் நான் முறையாக ரசீது கொடுத்து அந்த அபராதத்தை வசூலிப்பதாக கூறினார். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் 55வது வார்டு கவுன்சிலர் ராமதாஸிடம் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு வந்ந கவுன்சிலருக்கும், தமிழ்ச்செல்வன் உடன் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் கவுன்சிலர் கழுத்தை பிடித்து தமிழ்ச்செல்வன் நெரித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாடு பிடித்து வைக்கும் வாகனத்தின் இடது புற கண்ணாடியை அவரே உடைத்ததாக கூறினர். இந்நிலையில் கவுன்சிலரிடம் தமிழ்செல்வன் நடந்து கொண்டதை பார்த்த பொதுமக்கள் அவரை அடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடியும் சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழ்ச்செல்வன் உடனடியாக மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் கொடுத்து அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் நேரில் வந்த பொழுது மேலும் பொது மக்களுக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரி பொதுமக்களிடம் கடுமையான வார்த்தை பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியில் கால்நடைகளால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு செல்வோர் வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயப்படுவதால் மாநகராட்சி கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கால்நடைகளை பிடிப்பதில் சிரமம் இருப்பதாகவும் தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார். பொதுமக்களை பொறுத்தவரையில் தங்களுடைய கால்நடை சாலைகளில் சுற்றி திரியும் பொழுது அவற்றை பிடித்தால் அபராத தொகை கட்டினால் முறையாக எங்களுக்கு ரசீதுடன் கால்நடை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.