திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த போஸ்டருக்கு சாணி - பரபரப்பு.

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த போஸ்டருக்கு  சாணி - பரபரப்பு.

திருச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, படத்திற்கு சாணி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணியாக பிரிந்தனர்.அதில், அ.தி.மு.க., திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் நடராஜன், தஞ்சாவூர் வைத்திலிங்கம் போன்ற சிலர் மட்டும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தனர்.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்களை வசப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 11ம் தேதி கூட்டிய பொதுக்குழுவில், அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரான ஜெயலலிதா நீக்கப்பட்டு, தற்காலிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் புகுந்து, ஆவனங்களை கைப்பற்றினார்.ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமும் நிகழ்ந்ததால், தலைமைக்கழகம் வருவாய்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இரு தரப்பினரும் மாறி, மாறி அறிக்கையும், பேட்டியும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் திருச்சி திருவாணைக்காவல் மற்றும் மாநகர பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், எடப்பாடி பழனிச்சாமி படம் கிழிக்கப்பட்டும்,  சாணி அடிக்கப்பட்டு இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஒ.பி.எஸ். ஆதரவாளராக இருக்கும் நடராஜன்
திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பில் உள்ளதால்,   எடப்பாடி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு இருப்பது, அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO