திருச்சி மீன்பிடித் திருவிழாவில் வலையில் சிக்கிய பாம்புகள் - பரபரப்பு

திருச்சி மீன்பிடித் திருவிழாவில் வலையில்  சிக்கிய பாம்புகள் - பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கன்னிராஜாபட்டியில் 60 ஏக்கர் பரப்பளவில் கன்னி குளம் அமைந்துள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது குளத்தில் நீர் முழுவதும் நிறைந்தது அதிக அளவில் மீன்கள் துள்ளி விளையாடின.

இந்நிலையில் தற்போது நீர்மட்டம் குறைந்து விட்டதால் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடி வலைகளுடன் குளத்தில் இறங்கி மீன்களைப் பிடிக்க தொடங்கினர். இதில் வலைகளில் மீன்கள் மட்டுமல்லாது பாம்புகளும் சிக்கின.

இதனால் அதிர்ச்சியடைந்த மீன்பிடி ஆர்வலர்கள் வலையிலிருந்து பாம்புகளை பிரித்தெடுக்கப் படாதபாடுபட்டனர். மேலும் 15க்கும் மேற்பட்ட பாம்புகள் மீன்களோடு மீன்கள் வலையில் சிக்கின. கெண்டை கெளுத்தி, கட்டலா, ஜிலேபி உள்ளிட்ட மீன்களை உற்சாகமாக பிடித்து பைகளில் அள்ளி சென்றனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் மீன்களுடன் பாம்புகளும் சிக்கியதை பொருட்படுத்தாமல் பொது மக்கள் உற்சாகத்துடன் மீனை பிடித்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO