10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து பலமுறை முறையிட்டும் பட்டா கிடைக்கவில்லை - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து பலமுறை முறையிட்டும் பட்டா கிடைக்கவில்லை - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க மலை கோவில்.

Advertisement

மலைக் கோவிலை சுற்றி கிட்டத்தட்ட 95க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கோயில் நிலங்களில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவுக்கு மனு அளித்ததோடு மட்டுமல்லாமல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைப்பின் மூலமும் பட்டா வழங்கக் கோரி தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

இவ்வாறு பலமுறை மனு அளித்தும் தங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்றும் மலைக்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.