நிரந்தர சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி மல்லாச்சிபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

நிரந்தர சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி மல்லாச்சிபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள மல்லாச்சிபுரம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு நிரந்தர சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.தங்களுடைய பகுதியில் இருந்த ஆளில்லா ரயில்வே கேட் நீக்கப்பட்டு ரயில்வே துறையினரால் சில மாதங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைத்து கொடுத்ததாகவும்

Advertisement

அந்த தற்காலிக சுரங்க பாதையில் வாகனங்கள் சென்றுவர போதிய வசதி இல்லாததால், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை வர இயலாத சூழல் உள்ளதாகவும், இப்பாதை வழியாக தான் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ரெங்கநாதர் உறையூர் நாச்சியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்படும் நிலையில், வாகனங்கள் சென்றுவர வசதியாக உள்ள வகையில் ஒரு நிரந்தரமான சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.