வாலிபரை கொலை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

வாலிபரை கொலை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த (10.05.2024)-ந் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருணாச்சலம் சிலை அருகில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவம் இடம் சென்று, பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியும், வழக்குப்பதிவு செய்தும் விசாரணை செய்ததில், இறந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த பெண் திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. 

இந்த நிலையில், அந்த பெண்ணின் மகன் தனது தாயிடம் பிரச்சனை செய்த காரணத்தினால் மேற்படி நபரை அருவாளால் வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அரியமங்கலம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த எதிரி மாதேஷ் @ மாதேஷ்வரன் (18), த.பெ.மதன் மற்றும் 3 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும் எதிரி மாதேஷ் @ மாதேஷ்வரன் என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision