ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரின் வங்கி கணக்கில் சேர்க்கபட்டது
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறவதை தடுக்கும் வகையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதன்படி கடந்த 23.02.2022-ந் தேதி ஸ்ரீரங்கம் காவேரி நகரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் ஆன்லைன் மூலமாக National Cyber Crime Reporting Portal (NCRP)-யில் கொடுத்த புகாரில்
தனது செல்போனுக்கு 9861914731-என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து பெறப்பட்ட
குறுஞ்செய்தியின் வாயிலாக தனது 9894011770 எண் கொண்ட சிம் கார்டு காலாவதியாகப் போவதாகக் கூறி அதனை ரூ10/- க்கு ரீசார்ஜ் செய்தால் உடனே புதுப்பிக்கப்படும் என்று கூறி மனுதாரரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றுக் கொண்டு ரீசார்ஜ் உடனே செய்வதாகக் கூறியும், பின்னர் தனது வங்கி கணக்கிலிருந்து பணம் ரூ.36,300 எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்த பின்பு தான் எதிர்மனுதாரர் தனக்கு ரீசார்ஜ் செய்வதாகக் கூறி தனது
வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
ஏமாற்றியவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தரக்கோரி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், உத்தரவுப்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மேற்படி புகார் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முறைகேடாக நடைப்பெற்ற பண
பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில் மேற்படி பணம் ரூ. 36,300/- Mobikwik Systems Private Limited, Nodal Account-ற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேற்படி ஆண்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட வங்கியின் Legal Department-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரரின் வங்கி கணக்கில் அவர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் ரூ. 36,300- திரும்ப
சேர்க்கப்பட்டது.
மேலும் இது போன்று ஆன்லைன் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆன்லைனில் வரும் நம்பி தங்களின் வங்கி கணக்கை யாரிடமும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும், யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் : 1930 அல்லது 155260- என்ற எண்களை விரைவாக தொடர்பு கொள்ளுமாறு புகார் அளிக்கலாம் எனவும், திருச்சி மாநகரில் இதுபோன்ற ஆன்லைன் மூலம்
பணமோசடி ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO