திருச்சியில் 1120 வகை இயற்கை உணவுகள் - ஆட்சியர் ருசித்து பரிசு

திருச்சியில் 1120 வகை இயற்கை உணவுகள் - ஆட்சியர் ருசித்து  பரிசு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. ஊராட்சிகளிலும், ஒன்றியங்களிலும் நடந்த போட்டியில் தேர்வான 28 குழுக்கள்  இன்று(03.02.2020) ஆட்சியர் அலுவலக கட்டிய நுழைவாயில் முன்பு பல்வேறு விதமான இயற்கை ஊட்டச்சத்து உணவுகளை தயார் செய்து வைத்திருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் ஐந்து நபர்கள் பங்கேற்றிருந்தனர். சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் 3 தலைப்புகளில் குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் ,ரத்த சோகையை நீக்க ஊட்டச்சத்து உணவு ,வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

40க்கும் மேற்பட்டோர் இயற்கை உணவு வகைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.இயற்கை பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகளை குடும்ப நல திட்ட இயக்குனர் மற்றும் சமூக நல அலுவலர் உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் உணவு வகைகளுக்கான குழுக்களை ருசி பார்த்து தேர்வு செய்தனர் . சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் 1120 வகையான இயற்கை உணவு பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து வைத்திருந்தனர் .

பொதுமக்கள் ஏராளமானோர் இந்த உணவுகளை ருசித்தனர்.இயற்கை பாரம்பரிய உணவுகளான பயிறு வகைகள், கீரை வகைகள் ,இனிப்பு வகைகள் என அனைத்துமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்றவர்கள் தங்களது சொந்த செலவில் தயார் செய்து வைத்திருந்தனர்.2020- 21 தேசிய குடும்ப நல கணக்கீட்டின்படி 57 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .அதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு  உத்தரவின் பேரில் இந்த விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்களுக்கு முதல் பரிசாக 2,500 ரூபாயும் இரண்டாம் பரிசாக 2000 ஆயிரம் ரூபாய் ,மூன்றாம் பரிசாக 1500 ரூபாய் இரண்டு ஆறுதல் பரிசாக 2 குழுக்களுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு போட்டிகளை மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் மற்றும் மாநில வள பயிற்றுநர் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj#

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO