தேர்தலில் போட்டியிட நிராகரிப்பு உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம் - வழக்கு பதிவு

தேர்தலில் போட்டியிட நிராகரிப்பு  உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி  போராட்டம் - வழக்கு பதிவு

திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி காலையிலேயே போராட்டத்தில் துவக்கினார். போராட்டத்திற்கான காரணம் என்னவென்று கேட்ட பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ராஜேந்திரன் பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார். தற்பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து அதை மட்டும் ஏன் நிராகரித்தார்கள் என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். 

காலையிலேயே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சென்ற மக்கள் அதை வேடிக்கை பார்த்து சென்றனர். போலீசார் வந்து அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். இருப்பினும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சை மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தீயணைப்பு துறையினர் மின் கோபுரம் மீது ஏறி ராஜேந்திரனை பிடித்தனர்.

இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபுரத்தின் கீழ் பகுதியில் வலைகளைக் கட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனை கயிறு கட்டி கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து அமர்வு நீதிமன்ற காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை ஆசிவாசப்படுத்தி காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இந்த முதியவரின் போராட்டத்தால் திருச்சி நீதிமன்றம் பகுதி உள்ள ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision