கணினி திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
ஒமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருச்சி ஹோப் பவுன்டேசண் கணினி மற்றும் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா (01.08.2023) நடைபெற்றது. பத்தாயிரம் கிராமப்புற மற்றும் பின் தங்கிய இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாக கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
ஒமேகா நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி கண்ணன் சுகந்தராமன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மற்றும் ஹோப் பவுண்டேஷன் மண்டல இயக்குனர் மரியஜோசப் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினர்களாக சாய்ஸ் இன்ஃபோடெக் திருச்சி மண்டல HR விக்னேஷ் மற்றும் GM சொல்யூசண்ஸ் திருச்சி மண்டல HR ஸ்ரீவித்யா ஆகியோர் கலந்துகொண்டு
பயிற்சி பெற்று வேலைவாய்ப்பில் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் அறக்கட்டளையின் திட்ட மேலாளர் ரிதின் ஜெல்திஸ் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn