திருச்சியில் டாம்கோ கடன் திட்டங்கள் குறித்து லோன் மேளா நடைபெறவுள்ள இடங்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான கல்விக் கடன், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கான கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட விபரப்படியான இடங்களில் நடத்தப்பட உள்ளது.
டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடனும் திட்டங்களுக்கு விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தின் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும்.
புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் எனவும், மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சியரபி மற்றும் சிறுபான்மையினர் மேற்படி சிறப்பு முகாம்களின் கலந்து கொண்டு மேற்படி ஈடன்: திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட தகல்களையும் சமாப்பீக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான நீர்பாசன கடன் பெற விண்ணப்பதாரர் சிறுகுறு விவசாயி என்பதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்று வழங்க வேண்டும் கல்விஇது தொடான கூடுதல் விபரங்களுக்கு இணைப்பதிவாளார் (கூட்டுறவு சங்கங்கள்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நன அலுவலர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி அலுவலர்களை அணுகலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.