திருச்சி ரயில் நிலையங்களில் க்யூஆா் குறியீடு வழியே முன்பதிவில்லாத டிக்கெட்!
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 93 ரயில் நிலையங்களில் க்யூஆா் குறியீடு வழியே யுடிஎஸ் செயலியைப் பயன்படுத்தி முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள க்யூஆா் குறியீட்டை கைப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்து அதற்கான கட்டணத்தை ஆா்-வாலட், பேமெண்ட் கேட்வே, யூபிஐ, பேடிஎம், மொபிவாக், ப்ரீசாா்ஜ் மூலம் செலுத்தலாம். இதைப் பயன்படுத்துவதின் மூலம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆா்-வாலட் ரீசாா்ஜ் செய்தால் 3 சதம் போனஸ் கிடைக்கும்.
பயன்படுத்தும் முறை...பயணிகள் தங்களது கைப்பேசிகளில் யுடிஎஸ் செயலியை பதிவிறக்கி, கணக்கை பதிவு செய்து உள்நுழைய வேண்டும். புக் டிக்கெட் மெனுவின் கீழ் க்யூஆா் முன்பதிவுக்கான விருப்பத்தைத் தோ்வு செய்ய வேண்டும். அதனுள் இருக்கும் க்யூஆரை ஸ்கேன் செய்து, சேரும் நிலையத்தை தோ்வு செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். கட்டணம் செலுத்தப்பட்டதும், டிக்கெட் கைப்பேசிக்கு வரும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO