திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்ற ரயிலில் தீ விபத்து - இரண்டு 2 பெட்டிகள் நாசம்

Sep 23, 2023 - 16:15
 2183
திருச்சியிலிருந்து புறப்பட்டு  சென்ற ரயிலில் தீ விபத்து - இரண்டு 2 பெட்டிகள் நாசம்

திருச்சியிலிருந்து குஜராத்  கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயில், குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள 2 பெட்டிகளில் தீ பரவியதால் பயணிகள் அலறி அடித்து ஓடி இறங்கினர். பின்னர் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சரக்குகளை வைத்திருந்த பெட்டி முழுவதும் எரிந்துள்ளது. அதற்கு அடுத்ததாக குளிர்சாதன ரயில் பெட்டிக்கு தீ பரவியது. இதனையடுத்து 2 பெட்டிகள் பிரிக்கப்பட்டதால் பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு பயணிகளை ஏற்றுக் கொண்டு ரயில் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியிலிருந்து இந்த ரயில் நேற்று வெள்ளிக்கிழமை(22.09.2023) அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision