திருச்சி அரசு மருத்துவமனையில், மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

Sep 23, 2023 - 21:36
Sep 23, 2023 - 21:51
 871
திருச்சி அரசு மருத்துவமனையில், மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

கரூர் மாவட்டம், மைலம்பட்டி, கோட்டை கரியாப்பட்டி ஊரைச் சேர்ந்த 23வயது மதிக்கத்தக்க நபர் சாலை விபத்து ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (20.09.2023) அன்று மாலை 07:15 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு (22.09.2023) அன்று காலை 11:37 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார். மேலும் அவருடைய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர். மேலும் Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின் படி, தகுதியான நபருக்கு தானமாக பெறப்பட்ட உறுப்புகளில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக இரத்தசுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு ஒரு சிறுநீரகம், இம்மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.D.நேரு.,MD., DMRD., தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.E.அருண்ராஜ். MD..DM., மேற்பார்வையில் மருத்துவ நிலைய அலுவலர் மரு.ராஜ்மோகன், MDS., வழிகாட்டுதலின்படியும் அமைக்கப்பட்ட மருத்துவ குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சைக்குழு

மரு.ஜெயபிரகாஷ் நாராயணன், MS., Mch மரு.ரவி,MS.,Mch மரு.பரணி, MS.,Mch மரு.பிரபாகரன், MS,Mch மரு.சந்தோஷ்குமார், MS.,Mch மற்றும் சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் மரு.சு.கந்தசாமி,MD.,DM., மரு.A.பிரகாஷ், MD, மரு.மைவிழிசெல்வி,MD., மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் மரு.K.கவிதாராணி. MD, மரு.1.பிரியதர்ஷினி, MD., மற்றும் செவிலியர் ராஜராணி மற்றும் செவியலியர் குழு. செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 19-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் இரண்டு கண்விழிகளும் இரண்டு பயனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision