தொடர் மழையால் திருச்சியில் கோவிலின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது

தொடர் மழையால் திருச்சியில் கோவிலின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது

திருச்சி வயலூர் கொத்தட்டை கிராமத்தில் உள்ள உறங்காய் அம்மன் கோவில் அருகில்  கிராமத்திற்கு சொந்தமான ஊரணிகுளம் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. சுற்றுச்சுவரை  நெருங்கியே கோவில் அமைக்கப்பட்டுள்ளதால் கோயிலின் அடிதள தரையையும் விரிசல் அடைந்து உள்ளது. கோயிலின் சுவர்களும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

20 வருடத்திற்கு முன்பு ரூபாய் 35 லட்சம் செலவில் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த குளத்தை தூர்வாரினர். ஆண்டுகள் பல கடந்த கோயில் சுற்று சுவரின் ஒரு பகுதி இடிந்து குளத்தினுள்ளே விழுந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் கோவிலின் உடைந்த சுற்றுச்சுவர் பகுதியை நேரில் வந்து ஆய்வு செய்து புகைப்படங்களை எடுத்து சென்றுள்ளார்.

எனவே சுற்றுச்சுவரை சீரமைக்க வருவாய் துறையினர், ஒன்றிய ஆணையர் உடனடியாக வந்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இனிவரும் காலங்களில் கோவிலில் வேறு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுப்பதற்கும் நடவக்கை எடுக்க ஊர்மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn