திருச்சி மாவட்டத்திற்கு 620 மெ.டன் யூரியா உரங்கள் வரப்பெற்றுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்திற்கு 620 மெ.டன் யூரியா உரங்கள் வரப்பெற்றுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 86,250 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுதானியங்கள் 1,10,000 ஏக்கர் அளவிலும் பருத்தி 24,915 ஏக்கர் அளவிலும், கரும்பு 3,950 ஏக்கர் அளவிலும் எண்ணெய் வித்து பயிர்கள் 20,112 ஏக்கர் அளவிலும் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் 62,500 ஏக்கர் அளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிர்களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பயிர்களுக்கு உரங்களின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி
மாவட்டத்திற்கு மதராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் மூலம் 620 மெ.டன் யூரியா உரங்கள் (12.11.2021) அன்று ரயில் மூலம் வரப்பெற்றுள்ளது. இவ்வுரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுபப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது. தற்பொழுது நிலவி வரும் சீதோஷ்ண நிலை காரணமாக தழைசத்து உரத்தினை
வேளாண்மைத்துறை பரிந்துரைக்கப்படும் அளவுகளில் மட்டும் பயன்படுத்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உரங்களை குறைந்த அளவு மற்றும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் 
பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்கச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் ஒருசில வட்டாரங்களில் தென்படுவதால் விவசாயிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் மத்திய பூச்சியியல் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் கீழ்க்காணும்


முதலாம் தெளிப்பு : மருந்து தெளித்தல் அசார்டிராக்டின் 25 லி @ எக்டர்.

இரண்டாம் தெளிப்பு : மெட்டாரைசியம் அனிசோபியா 2.5 கிலோ/எக்டர் அல்லது ஸ்பைனிடோரம் 

11.7% SC 250 மி.லி/எக்டர் அல்லது குளோராண்டிரினிபுரோல் 200 மிலிஃஎக்டர் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 200 கிராம் / எக்டர் அல்லது தையோடிகார்ப் 750 கிராம்/எக்டர் ஆகிய மருந்துகளை உரிய கால இடைவேளையை பயன்படுத்தி படைப்புழு தாக்குதல்களை கட்டுப்படுத்த இதன்வழி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பருத்தி மற்றும் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வடிய செய்யும் விதமாக வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn