சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் ஆறாவது மாநில மாநாடு

சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் ஆறாவது மாநில மாநாடு

சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் ஆறாவது மாநில மாநாடு திருநெல்வேலி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இனிதே தொடங்கி வைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது.

இதில் தென் மாநிலங்களில் உள்ள ரேடியோகிராபர்கள், ரேடியோகிராபி மாணவர்கள் மற்றும் ரேடியோகிராபி பேராசிரியர்கள் என 500 பேர்கள் கலந்து கொண்டார்கள். தொடக்க விழாவில் அரசு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதிரியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர். எஸ் நான்சி டோரா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடக்கி வைத்தார். திருநெல்வேலி காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் லட்சுமணன், செயல் தலைவர் வைரமுத்து மற்றும் செயல் மேலாளர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அமைப்பின் தமிழ்நாடு புதுச்சேரி பிரிவின் நிறுவனத் தலைவர் கே.முனிரத்தினம், பொதுச் செயலாளர் சி.மாரிமுத்து, பொருளாளர் கே.சோமசேகர், சரவணகுமார், ராகவன், பேராசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விழா மலர் வெளியிடப்பட்டது. இரண்டு நாட்கள் தொடர்ந்து மாணவர்களுக்கான அறிவியல் கருத்தரங்குகளும் நடைபெற்றது.

துறை சார்ந்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த படைப்புகளுக்கான போட்டிகளும் நடைபெற்றன. விழாவில் மூத்த நுண் கதிர் வீச்சாளர் வி.ராஜமாணிக்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாக்கான ஏற்பாடினை மாரிமுத்து மற்றும் ராகவன் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்து இருந்தனர். இவ்விழாவின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision