கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு. சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
சமயபுரம் மெயின் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் கண்ணன். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரின் வீட்டின் பின்புறம் கழிவுநீர் சேமிப்புக்காக 4 அடி நீளம், 6 அடி உயரத்தில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டிக் கொண்டு உள்ளனர் இந்நிலையில் வீட்டின் பின்புறம் சென்ற பசுமாடு எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தது.
இது குறித்து சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு உரிமையாளர் கண்ணன் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சமயபுரம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி, சிறப்பு நிலைய போக்குவரத்து ரவிக்குமார் உள்ளிட்ட வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தொட்டிக்குள் விழுந்த பசு மாட்டிற்கு பின்புறம் லேசான காயங்கள் ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision