எந்த காரணத்தைக் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுத்து பெறமாட்டோம் - அமைச்சர் மகேஸ் பேட்டி

எந்த காரணத்தைக் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுத்து பெறமாட்டோம் - அமைச்சர்  மகேஸ் பேட்டி

திருச்சியில் நடைபெற்ற ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழாவில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மகேஸ்..... ஒன்றிய அரசு நிதி வழங்காதது குறித்து ஏற்கனவே பலவிவாதங்கள் இதை சார்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தில் முதலில் எங்களுக்கான தவணைத் தொகையை வழங்குகள் என நாங்கள் கேட்பது சமக்ரா சிக்ஸா திட்டத்தின் கீழ்... பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தரமான கல்வியை வழங்க வேண்டிய அதே வேளையில், புதிய கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, எனவே நாங்கள் கமிட்டி அமைத்து அந்த கமிட்டி பரிந்துரை செய்வதை பொருத்தே முடிவெடுப்போம் என தெளிவாக சொல்லிவிட்டோம்.

எங்களது கமிட்டி அதை ஒத்துக்கொள்ளவில்லை என மத்திய அமைச்சரிடம் சொல்லிவிட்டு, அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணத்தை கொடுங்கள் என சொல்லிவிட்டோம். எந்த காரணத்தைக் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுத்து இதை பெறமாட்டோம். மத்திய அமைச்சருக்கே தெரியும் நாங்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை

கமிட்டியின் அறிக்கையை பொறுத்து நாங்கள் ஒத்துக் கொள்வோம் அந்த கமிட்டி ஒத்துக் கொண்டால் மட்டுமே என்று சொன்னோம். தரமான கல்வியை தரும் அதே வேளையில், அதில் உள்ள மறைமுக அஜந்தாவை நாங்கள் தெரிந்து கொள்வோம் என தெளிவாக சொல்லிவிட்டோம், கமிட்டி ஒத்துக் கொள்ளவில்லை எனவே நாங்களும் ஒத்துக்கொள்ள மாட்டோம். மாண்பமை பொருந்திய ஆளுநர் அவர்கள் மாநில புத்தகத்தை படிப்பதன் மூலமாக போட்டி தேர்வுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். எவ்வளவு பேர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளார்கள் என்பதை, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கடந்து நமது பாடத்திட்டம் எப்படி சிறப்பாக உள்ளது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து பேசட்டும்.

மத்திய மற்றும் மாநில அரசின் போட்டி தேர்வுகளில் நமது மாநிலத் பாடக புத்தகத்தில் இதுதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது மேலும் மாநில புத்தகத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் நூலகங்களில் தயார் செய்து வருகிறார்கள். வேண்டுமானால் ஆளுநர் ஒரு நாள் நூலகத்திற்கு என்னுடன் ஆய்வுக்கு வரட்டும் அதன் பின்பு ஆளுநர் சொல்லட்டும் என்றார். முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்த பொழுதும் தினம் இது குறித்து அப்டேட்களை கேட்டறிந்து வருகிறார் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision