தேசிய மாதிரி ஆய்வு கணக்கெடுக்கும் பணி

தேசிய மாதிரி ஆய்வு கணக்கெடுக்கும் பணி

தேசிய மாதிரி ஆய்வுத் திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புற மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் மூலம் கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 79-வது சுற்றுக்குரிய தேசிய மாதிரி ஆய்வுக்கான கணக்கெடுப்புப்பணி ஜூலை 2022ல் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் 2023 வரை 20 கிராமப்புற மாதிரிகளிலும், 12 நகப்புற மாதிரிகளிலும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வின் நோக்கமானது நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கும் மற்றும் மக்களின் பாதுகாப்பான குடிநீர் சுகாதாரம், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இதனுடன் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள். நுகர்பொருள் செலவினங்கள் மற்றும் கல்வி நிலை குறித்த தகவல்களும் சோரிக்கப்படுகிறது.

மேலும், இந்த ஆய்வில், ஆயுஷ் (AYUSH) ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகிறது. இவ்வாய்வில் ஆயுஷ் மூலம் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் அவற்றிற்கான செலவுகள் போன்ற தகவல்களும் சேகரிக்கப்படுகிறது இத்தகவல்களின் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு கொள்கை முடிவுகள் மற்றும் திட்டமிடல் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, மக்களுக்குத் தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் புள்ளியியல் துறை களப்பணியாளர்களிடம் அவர்கள் கோரும் விவரங்களை தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பினை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்புஅளித்திட வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO