6ஆயிரம் அடியில் புதிய இணை ஓடுதளம் ரெடி -திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் பேட்டி
திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய இயக்குனராக சுப்பிரமணி கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்.... திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் கட்டுமானப் பணிகள் 60% நிறைவடைந்து விட்டது.அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திட்டமிட்டபடி புதிய விமான (2வது) முனையம் பயன்பாட்டுக்கு வரும்.
தற்பொழுது விமான ஓடுதள நீளம் 8000 அடி உள்ளது. அதற்கு இணையாக விமானங்கள் இறங்குவதற்கு 6 ஆயிரம் அடியில் புதிய இணை ஓடுதளம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் விமானங்கள் இறங்குவதில் தாமதம் ஏற்படாது என தெரிவித்தார்.புதிய விமான நிலைய ஓடுதளம் 4000 அடி நீளத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெறுகிறது.திருச்சி விமான நிலைய வளாகத்திற்குள் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO