வருவாய் துறை அமைச்சரை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள்

வருவாய் துறை அமைச்சரை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் ஐந்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் பள்ளிகளில் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட எறையூர் கிராமத்தில் 1976 ஆண்டு முதல் 350 ஏக்கர் நிலத்தை நாடோடிகளாக அலைந்த 150 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனையும், 350 ஏக்கர் நிலமும் சாகுபடி செய்ய, அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால், வழங்கப்பட்டு 46 ஆண்டுகளாக உழுது சாகுபடி செய்து வருகின்றனர். நிலம் அற்றவர்கள் என்ற அத்தாட்சி கிடைத்த பிறகு, பட்டா வழங்குவதாக கூறிவிட்டு இதுவரையிலும் பட்டா வழங்கப்படவில்லை.

மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றமும் நிலத்தில் உழுவதற்கு தடை இல்லை என்ற உத்தரவு வழங்கியும், பெரம்பலூர் மாவட்ட வருவாய் துறை நரிக்குறவர்களை உழுது விவசாயம் செய்ய விடாமல்  தடுத்து வருவதாகவும், எறையூரில் தங்கி நாடோடிகள் ஆக குழந்தைகளை படிக்க வைக்கவும், தங்குமிடம் இன்றி உள்ள நரிக்குறவர்களுக்கு சாகுபடி செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்கி சீர் மரபினர் பழங்குடி மக்களாகிய நரிக்குறவ மக்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர்கள் மற்றும் சீர் மரபினர் பழங்குடியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து வருவாய் துறை அமைச்சரை சந்தித்து மனு அளிப்பதாக காத்துக் கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது....ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது  (தற்போது பெரம்பலூர் மாவட்டம் ) எறையூர் கிராமத்தில் சீர் மரபினர் எனப்படும் நரிக்குறவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வரும் நரிக்குறவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி மறுக்கும் வகையில், பட்டா வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து காலதாமதப்படுத்துவதாகவும், மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க மறுக்கும் பட்சத்தில் தற்கொலை போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO