திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு விரைவில் நிலம் எடுக்கப்படும் அமைச்சர் பேட்டி

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு விரைவில் நிலம் எடுக்கப்படும் அமைச்சர் பேட்டி

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர்..... தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 800 சர்வேயர்கள் புதிதாக நியமனம் செய்ய உள்ளோம். 

சாதி சான்றிதழ் கேட்டு ஐந்தரை லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் 4.5 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளோம். வருவாய்த்துறை சம்பந்தமான கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் இல்லை. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இடங்களை மீட்டு வருகிறோம். அதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே 20 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தி கொடுத்துள்ளோம். மேலும் 75 ஹெக்டேர் நிலங்கள் கேட்டுள்ளனர். அதை விரைவில் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO