அன்பாலயத்தில் மதிய உணவு வழங்கிய திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்

அன்பாலயத்தில் மதிய உணவு வழங்கிய திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான முதியோர் இல்லம்/குழந்தைகள் காப்பகம்/மனநல காப்பகம் ஆகியவற்றை பார்வையிட திட்டமிட்டிருந்தது.

 அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், ஹோலி கிராஸ் பள்ளி அருகேயுள்ள NULM தங்குமிடம் & அன்பாலயத்தை (மனநல காப்பகம்) இன்று பார்வையிட்டுற்றனர்.

இந்நிகழ்விற்கு காப்பகத்தின் இயக்குநர் .T.C.S.செந்தில் குமார், மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 அக்காப்பகத்தில் சுமார் 20 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். நிகழ்வின் போது 18 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடினர். 

இதன் வாயிலாக வாழ்க்கை அனைவருக்கும் எளிதாய் அமைவதில்லை என்னபதையும் நாம் மற்றவர்களை விட எவ்வளவு வசதிகளை பெற்றுள்ளோம் என்பதையும் உணர்ந்ததாய் மாணவர்கள் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக முதியோர் இல்லங்களுக்கு சென்று வர திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அன்பாலயம் அமைப்பின் அரவணைப்பில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 48 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் தாமாக முன்வந்து ரூ.2000 மதிப்பிலான மதிய உணவு வழங்கினர்.

T.C.S.செந்தில் குமார் பேசுகையில் இதுபோன்ற அமைப்புகளுக்கு மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் எனவும், சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தலைமைப் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் பாராட்டுவதாகவும் கூறினார்.

 இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் அவர்களுக்கும், சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கும், நாட்டு நலப்ணித்திட்ட அமைப்பிற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.