தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி கே.கே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தென்றல் நகர் அருகில் உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின் பேரில் முசிறி, தின்னனூரை சேர்ந்த கார்த்திக் (28) த.பெ.விஸ்வநாதன், என்பவரது கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலருடன் திருச்சி மாநகர காவல்துறையினர் சென்று சோதனை செய்யப்பட்டது.

இந்த கடையில் ஹான்ஸ்-31.500 கிலோ கிராம், கூல்லிப்-4 கிலோ, விமல் பான் மசாலா-4.500 கிலோ கிராம் மற்றும் 42 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், எதிரி கார்த்திக் என்பவரை கைது செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தும், மேற்கண்ட கடையின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும்போதை பொருட்களான கஞ்சா, குட்கா புகையிலை பொருள்களை விற்பனைசெய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையானநடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல்ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision