தேர்தல் பறக்கும் படை வாகனம் விபத்து காவலர் படுகாயம்

தேர்தல் பறக்கும் படை வாகனம் விபத்து காவலர் படுகாயம்

தமிழக முழுவதும் 6ம் தேதி சட்டமன்ற நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சேட்டிஸ்டிக் சர்வலைன் என்ற தேர்தல் பறக்கும் படை பிரிவு  யோகேஸ்வரி தலைமையில் இன்று காலை துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது டிரைவர் பிரமோத் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த திருவெறும்பூர் காவலர் அறிவழகன் தலையில் அடிபட்டதால் அவருக்கு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81