சமயபுரம் அருகே இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

சமயபுரம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மடால நாகேஸ்வரராவ் மகன் மடால வெங்கடேஷ் (வயது 19) மற்றும் சீனிவாச ராவ் மகன் வேலுகு லட்சுமி அரவிந்த் ( வயது 19) உள்ளிட்ட 8 பேர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பி எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் மதியம் மடால வெங்கடேஷ் , வேலுகு லட்சுமி அரவிந்த் ஆகியோர் தனது நண்பர்கள் 8 பேருடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். கிணற்றில் குதித்து அவர்கள் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, மடால வெங்கடேஷ்க்கு நீச்சல் தெரியாது என்பதால் கிணற்றில் ஆழமில்லாத பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர்
இதனை கண்ட அவரது நண்பர் வேலுகு லட்சுமி அரவிந்த் உடனடியாக அவரை மீட்க முயற்சித்த போது இருவரும் நீரில் மூழ்கி மாயமானார்கள். உடன் இருந்த மற்ற நண்பர்கள் இருவரையும் தேடியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்களை மீட்க முடியாததால் உடனடியாக கிராம மக்களிடம் நண்பர்கள் நீரில் மூழ்கிய தகவலை கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி கிணற்றில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.
பின்னர் அவர்களுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சமயபுரம் போலீசார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision