இயக்கத்திற்கும் - தலைவருக்கும் - முதன்மைச் செயலாளருக்கும் உறுதுணையாக இருப்பேன்-மல்லை சத்யா அறிக்கை

இயக்கத்திற்கும் - தலைவருக்கும் - முதன்மைச் செயலாளருக்கும் உறுதுணையாக இருப்பேன்-மல்லை சத்யா அறிக்கை.சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு
ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோ அவர்களிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.
திராவிட ரத்னா தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ அவர்கள் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision