ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம் -பக்தர்களின்றி வைபவங்கள்!

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம் -பக்தர்களின்றி வைபவங்கள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் இன்று தரிசனம் தந்தார்.

Advertisement

உலகப்புகழ் பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் கடந்த 15.12.2020ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் இன்று மோகினி அலங்காரம் எனும் நாச்சியார் கோலத்தில் காட்சி தந்தார்.

Advertisement

மூலஸ்தானத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் (பெண் வேடம்) நம்பெருமாள் புறப்பட்டு வந்தார். இன்று மாலை 6 மணி வரை அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பின்னர் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக் கொட்டார பிரகாரம் வழியாக கருட மண்டபத்தில் நம்பெருமாள் வீற்றிருப்பார். அதையடுத்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார்.

20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியின் பெருவிழாவில்

முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை (25ம் தேதி ) காலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனையொட்டி 1200 மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 04.01.2021 திருவிழா நிறைவுபெறுகிறது

கோவிட் தொற்று காலம் என்பதால் பக்தர்கள் ,பொதுமக்கள் யாரும் இன்று மாலை 4 மணியிலிருந்து நாளைக் காலை 8 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலிலுக்கு அனுமதி கிடையாது.வெளியூர் பக்தர்கள் யாரும் மாலை 4 மணிக்கு மேல் ஸ்ரீரங்கத்திற்கு வரக் கூடாது எனவும் உள்ளூர்வாசிகள் மட்டும் அடையாள அட்டையை காண்பித்து அனுமதிக்கப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் நாளை காலை 8 மணி முதலே பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO