திருச்சி வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தமிழக பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் 17 முதல் 20 வரை பெருங்கோட்டம் வாரியாக தொண்டர்களை சந்தித்து வருகிறார்

 இந்நிலையில் இன்று காலை மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் தொண்டர்களை சந்தித்தார்

அதனை தொடர்ந்து இன்று மாலை திருச்சி பெருங்கோட்ட தொண்டர்களை சந்திப்பதற்காக திண்டுக்கலில் இருந்து திருச்சி வந்தார் அவருக்கு பாஜக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக வரவேற்பு அளித்தனர் 

திருச்சி வந்த அவரை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஒண்டிமுத்து தலைமையில் மேற்பட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாலை அணிவித்தும் சால்வைகள் அணிவித்தும் வரவேற்றனர் 

தொடர்ந்து அவருக்கு பாஜக மகளிர் அணி சார்பாக ஆரத்தி எடுக்கப்பட்டு பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டது

 தொடர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சை பெருங்கோட்ட தொண்டர்களை சந்திப்பதற்காக கார் மூலம்   செல்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision