கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது

திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 14.03.2021-ம் தேதி இரவு 11.00 மணியளவில் தனது 
அண்ணன் சிலம்பரசனை வீட்டின் அருகே உள்ள முட்புதரினுள் மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்து விட்டதாக கொடுத்த புகாரின்பேரில் அரியமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கினை அரியமங்கலம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புலன் விசாரணை செய்து, முன் பகை காரணமாக ரவுடி சிலம்பரசனை கொலை செய்யப்பட்டதாக தெரிய 
வந்த நிலையில் எதிரிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு, அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்த முத்துக்குமார் அரியமங்கலம் மேலஅம்பிகாபுரத்தை சேர்ந்த பாலு (எ) குட்டபாலு, திடீர் நகரை சேர்ந்த சரவணன், திருச்சி புள்ளம்பாடியை சேர்ந்த ரமேஷ் (எ) மகஸே்வரன் மற்றும் ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் ஆகிய ஐந்து நபர்கள் உட்பட மொத்தம் 14 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான எதிரி பாலு (எ) குட்ட பாலு (எ) பாலசுப்பிரமணியன் (35), என்பவர் மீது அரியமங்கலம் மற்றும் மதுரை 
அவனியாபுரம் காவல்நிலையத்தில் தலா ஒரு கொலை வழக்கும், கடலூர் மாவட்டம ; 
விருதாச்சலம் காவல்நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி 
காவல்நிலையத்தில் ஆயுதச்சட்டம், வெடி மருந்துகள் மற்றும் வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் தலா ஒரு வழக்குகளும்,

ஈரோடு மாவட்டம் சித்தோடு, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை காவல்நிலையங்களில் தலா ஒரு வழிப்பறி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தெரிய வந்தது. எனவே, மேற்படி பாலு (எ) குட்ட பாலு (எ) பாலசுப்பிரமணியன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், 
அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் அரியமங்கலம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின்க கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பாலு (எ) குட்ட பாலு (எ) பாலசுப்பிரமணியன் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a