விரிவாக்கப் பணிகளை தாமதப்படுத்த கோரி வியாபாரிகள் அரியமங்கலம் கோட்டத்தில் மனு

விரிவாக்கப் பணிகளை தாமதப்படுத்த கோரி வியாபாரிகள் அரியமங்கலம் கோட்டத்தில் மனு

திருச்சி பாலக்கரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி மாவட்டம் முழுவதும் கழிவுநீர் சாக்கடைகளை விரிவாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பாலக்கரை
பகுதியிலும் சாக்கடை பணிகள் கடந்த 27ம் தேதி சபியுல்லா மருத்துவமனை அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய தினமே காலணிக்கடை பகுதியிலும் தொடங்கப்படும் என்று தெரிவித்த நிலையில், 10 நாட்கள் கடந்தும்
பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் 20 நாட்களே
உள்ளது. இச்சமயம் பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டால் அது
வியாபாரிகளுக்கும், குறுகிய பாதையில் செல்வதற்கு பொதுமக்களுக்கும் பெரும்
பாதிப்பாக அமையும். கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களில் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மிகவும் அதிகம்.

இவ்வருடம் செழிப்பான வியாபாரம் அனைவருக்கும் இருக்கப் போவதாக சொல்லப்படும் நிலையில் இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டால் பெரும் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பணிகளை சற்றே தாமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn