கடன் தவணை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி உடலை வாங்க மறுத்து விவசாயிகள் சாலை மறியல்

கடன் தவணை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி உடலை வாங்க மறுத்து விவசாயிகள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து 75. இவர் எக்விடாஸ் என்ற தனியார் வங்கியில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதில் இரண்டு மாத தவணை 12 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில் மீண்டும் அதே வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிய அவர், மாத தவணை 6,000 ரூபாயும் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அவரது வீட்டுக்கு அந்த வங்கி பணியாளர்கள், தவணைத் தொகையை வாங்காமல் செல்லமாட்டோம் என்று அவரது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மருதமுத்து, வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த வங்கிப் பணியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இறந்த விவசாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் கடன் தவணை கேட்டு நெருக்கடி கொடுத்த வங்கி ஊழியர்களை கைது செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர்கள் அய்யாகண்ணு, அயிலை சிவசூரியன் தலைமையில் இறந்த விவசாயின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியாதல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn