குழந்தை நலக்குழுகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பணியாற்றிட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குழந்தை நலக்குழுகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பணியாற்றிட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுகளுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கலவி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும், ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவ! அல்லது உறுப்பினருக்கு நியமிக்க தகுதியற்றவர் ஆவார். இதற்கான விண்ணப்பப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tiruchirappalli.nic.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடினங்கள் 15.09.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ் கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்: 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்க வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி 620001. தொலைபேசி எண்: 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn