திருச்சியில் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கண்காட்சி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து வாரம் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், பங்கையும் வலியுறுத்துகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவே தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைந்த. குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (01.09.2021) தொடங்கி வைத்தார்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்கமாக ஊட்டச்சத்து குறித்து உணவின் வகைகளான சக்தி தரும் உணவான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருள்கள், வளர்ச்சி தரும் உணவான புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்கள், பாதுகாப்பு தரும் உணனான கீரை, காய், பழங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஷ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn