மருத்துவர்களை மக்கள் கடவுளாக பார்க்கின்றனர் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேச்சு

மருத்துவர்களை மக்கள் கடவுளாக பார்க்கின்றனர் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேச்சு

 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்கலூர் பகுதியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கல்வி பயின்ற 142.மருத்துவ மாணவ மாணவிகளுக்கு பட்டயச் சான்று வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஈஸ்வரி அரங்கில் நடைபெற்றது 

    விழாவிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர், ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து 142 மருத்துவ மாணவ மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கி பேசியதாவது 

    தமிழகத்தில் 67 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன இதில் ஆண்டு ஒன்றுக்கு 10 ஆயிரம் மாணவ மாணவிகள் மருத்துவ கல்வியை சேர்ந்து வருகின்றனர் மருத்துவ படிப்பில் தாய் சேய் நலம் நோய் தடுப்பு முறை ஆகியவற்றில் டாக்டர்கள் இரு கண்கள் போது செயல்பட வேண்டும் மருத்து வர்கள் தற்போது அதிக அளவில் உள்ளனர் ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு மருத்துவர்களின் அணுகுமுறையும் திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர் அதனால்தான் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக மக்கள் நினைக்கின்றனர் என்றார் அவர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக சேர்மன் ஆர். சிவக்குமார், ஒருங்கிணைந்த சேர்மன் நிரஞ்சன் , முதன்மை இயக்குனர் டாக்டர் சேதுராமன் டாக்டர் என் மால் முருகன் துணை இயக்குனர் டாக்டர் என். பாலசுப்பிரமணியம் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் எஸ் .ரேவதி மற்றும் பட்டம் பெற்ற மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO