திருவெறும்பூர் அருகே செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 23ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது.
அதன் தொடர்ந்து ஆறாம் தேதி காப்பு கட்டுதல் ஏழாம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரும் விழா நடைபெற்றது. இதை அடுத்து எட்டாம் தேதி முதலாம் கால யாக பூஜை ஆனது நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் தேதி ஆன இன்று நான்காம் காலையாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து பின்னர் ஸ்ரீ புங்காளம்மன், செல்லாயி அம்மன் கோவிலில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஏனைய பரிவார தெய்வங்களான விநாயகர் முருகன் மதுரை வீரன் முனியப்பன் ஆகிய தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரணை நடைபெற்றது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn