கோவிலை தூய்மைப்படுத்திய பேராசிரியர்கள், மாணவர்கள்

கோவிலை தூய்மைப்படுத்திய பேராசிரியர்கள், மாணவர்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான முத்தீஸ்வரர் மற்றும் கனகா அம்பிகை உடனுறை கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோவில் கட்டிடங்களில் மரம், செடி, கொடிகள் சூழ்ந்து பாழடைந்து உள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் பலமுறை அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள மரம் செடிகளை அகற்றும் பணியில் ஸ்ரீமதி ஆண்டவர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் சுத்தம் செய்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூத்தீஸ்வரர் கோவிலை சீரமைத்ததற்காக நன்றிகளை தெரிவித்து பாராட்டினர். இந்த கோவிலில் நூறாண்டுகளை கடந்த முத்தீஸ்வரர் கனகாம்பிகை உடனுறை ஆலயத்தை தூய்மைப்படுத்தும் பணியில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இலக்குமி பிரபா அம்மையார் ஆலோசனைபடியும்,

 திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் நிர்வாகம் மற்றும் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி வழிகாட்டுதல்படியும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக அருள்மிகு ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பகுதிகளை மையமாகக் கொண்டு ஏழு நாள் சிறப்பு முகாம் கடந்த 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமாயண காலத்து தொடர்புடைய ஜடாயு முக்தி பெற்ற ஸ்தலமான

அருள்மிகு ஶ்ரீ கனகாம்பிகை சமேத ஶ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள அடர்ந்த முட்புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆ.அருண்பிரகாஷ் தலைமையில், கடந்த மூன்று நாட்களாக 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வ மாணவர்கள் சிறப்பாக பணியாற்றினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision