தமிழ்நாட்டில் முதன் முறையாக திருச்சியில் லேசர் லைட் ஷோ...

தமிழ்நாட்டில் முதன் முறையாக திருச்சியில் லேசர் லைட் ஷோ...

திருச்சி மாநகராட்சி சார்பில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ரூபாய் 8.8 கோடி செலவில் லேசர் லைட் ஷோ அமைக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 6 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இதில் ஒலி மற்றும் ஒளி காட்சியானது காண்பிக்கப்பட உள்ளது. திருச்சியில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் அவற்றின் சிறப்புகள், தமிழர் பாரம்பரியம் உள்ளிட்டவைகள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

வாரந்தோறும் திங்கள் கிழமை தாயுமானசாமி வரலாறு, செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு, புதன்கிழமை திருவானைக்காவல் கோவில் வரலாறு, வியாழக்கிழமை சமயபுரம் கோயில் வரலாறு, வெள்ளிக்கிழமை கல்லணையின் வரலாறு, சனிக்கிழமை மலைக்கோட்டையின் வரலாறு, ஞாயிற்றுக்கிழமை கரிகாலச் சோழனின் வரலாறு ஆகிய அது காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த வகையான பொழுது அம்சங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலவற்றை எளிதில் அறிந்து கொள்ளலாம். மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் உள்ள படிக்கட்டுகளில் இருக்கை அமைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. வார நாட்களில் இரண்டு காட்சிகளிலும் (7pm - 8-pm) வார இறுதி நாட்களில் மூன்று காட்சிகளாக(07:00 - 08:30pm) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த லேசர் லைட் ஷோ காட்சியை பார்வையிட குழந்தைகளுக்கு ரூபாய் 25, பெரியவர்களுக்கு ரூபாய் 50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision