தங்கம் மற்றும் வெள்ளி குடத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு புனித நீர்

தங்கம் மற்றும் வெள்ளி குடத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு புனித நீர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்ச பூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெரும்கலை, ஐம்பெரும்பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்த) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப்பிரகார உற்சவம்.

மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக பிரதி வருடம் மே 6 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக இன்று 15 ம் தேதி (வைகாசி 1ம் நாள் அன்று) பஞ்சபிரகார உற்சவம் நடைபெறுகிறது.

இந்த பஞ்சப்பிரகார விழாவில் பத்தாம் திருநாளான இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பட்டாச்சாரியார்களின் திரு காவிரியில் இருந்து வெள்ளி குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்தும் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தமாக இத்திருக்கோயிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் பரிவாரங்கள்

புடைசூழ மேளதாளத்துடன் கொள்ளிடத்திலிருந்து வரப்பெற்ற திருமஞ்சனத்துடன் சிறப்பு வேத பாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்து மதியம் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.