திருச்சி எஸ்.ஆர்.எம் வளாகத்தில் திட்ட வரைவு கண்காட்சி கொண்டாட்டம்
திருச்சி எஸ்ஆர்எம் வளாகத்தில் திட்ட வரைவு கண்காட்சி தொடக்க விழா இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இவ்விழாவில் 3500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இந்த திட்ட வரைவு கண்காட்சியில் எஸ்ஆர்எம் வளாகத்தில் பயிலும் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் 232 திட்ட வரைவுகள் செய்யப்பட்டு அதை பள்ளி மாணவ மாணவியருக்கு திறம்பட எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியை திருச்சி எஸ் ஆர் எம் குழும நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்கள் சான்றோர்கள் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் எஸ் ஆர் எம் டி ஆர் பி பொறியியல் கல்லூரி முதல்வர் பி கணேஷ் பாபு வரவேற்றார் எஸ்ஆர்எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகங்களின் தலைவர் மருத்துவரார் சிவக்குமார் தலைமை உரை ஆற்றினார். துணைத் தலைவர் எஸ் நிரஞ்சன் விழா சிறப்புரையாற்றினார் தொடர்ந்து வளாக முதன்மை இயக்குனர் முனைவர் என் சேதுராமன் இயக்குனர் மால் முருகனாகியோர் வாழ்த்துரை வழங்கினர் சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பி கே நசைன் மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினார். அப்போது அவர் மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதுமைகளை புகுத்த வேண்டும் என்றும் தொடக்க விழாவில் விதைக்கப்பட்ட விதை நாடு முழுவதும் மரமாக விரிந்து பல முன்னேற்றங்களை அது காண வேண்டும் என்றும் கூறினர் மேலும் புதிய தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்படும் அனைத்து கண்டுபிடிப்புகளையும் மனித குலத்தின் உயர்விற்காக உருவாக்குவதே இன்றைய தலைமுறையினர் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் தொடர்ந்து எஸ்ஆர்எம் ஐஎஸ்டி டீன் முனைவர் ஆர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.